Published : 16 Feb 2022 08:59 AM
Last Updated : 16 Feb 2022 08:59 AM
சென்னை: திமுக பிரமுகர் செல்வம் கொலைவழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த நபர் எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார்.
சென்னை மடிப்பாக்கம் 188-வதுவட்ட திமுக செயலாளராக இருந்தவர் செல்வம் (45). திமுக சார்பில் 188-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவற்கு மனு போட்டிருந்ததார். மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள தனது அலுவலகத்தில் கடந்த 2-ம் தேதி இரவுதேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார்
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், செல்வத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த வழக்கில் ஏற்கெனவே 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். வியாசர்பாடியை சேர்ந்த அருண் என்பவரையும் போலீஸார் தேடி வந்தனர். போலீஸார் தேடுவதை அறிந்து அருண் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்றத்தில் அருண் நேற்று சரண் அடைந்தார். அவரை காவலில்எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT