Published : 09 Feb 2022 09:18 AM
Last Updated : 09 Feb 2022 09:18 AM

நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன்புதூரில் தீக்குளித்து கணவன், மனைவி தற்கொலை

நாகர்கோவில்

நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன்புதூர் அருகே சியோன்புரத்தை சேர்ந்தவர் ஜெயசிங்(68). இவரது மனைவி தங்கம்(65). இவர்களுக்கு சதீஷ், ஏசு ஜெபின் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

ஜெயசிங் உடல்நலம் பாதிக்கப் பட்ட நிலையில் வீட்டிலேயே இருந்து வந்தார். சதீஷ் திருமணமாகி தனியாக வசித்து வந்தார். ஜெயசிங்கும், தங்கமும் இளைய மகன் ஏசு ஜெபினுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ஏசு ஜெபின் அடிக்கடி குடிபோதையில் பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஜெயசிங்கும், தங்கமும் மகன் சதீசுக்கு போன் மூலம் தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர். பின்னர் வீட்டின் படுக்கையறைக்கு சென்ற இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளனர். இதனால் உடல் கருகிய இருவரும் சத்தமிட்டுள்ளனர்.

இதை கேட்டு வீட்டு மாடியில் இருந்த ஜெபின் கீழே இறங்கி வந்துள்ளார். அறைக்குள் தாய், தந்தையர் உடலில் தீப்பிடித்து எரிவதை பார்த்த அவர் கதவை திறக்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்து அங்கு வந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதற்குள் ஜெயசிங், தங்கம் இருவரும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீஸார் ஏசு ஜெபினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x