Published : 02 Feb 2022 10:48 AM
Last Updated : 02 Feb 2022 10:48 AM

மாணவியை கொன்ற மாணவருக்கு ஆயுள் சிறை: கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

உதயகுமார்

கரூர்

கரூரில் தனியார் பொறியியல் கல்லூ ரியில் மாணவியை கட்டையால் அடித்துக் கொன்ற மாணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் ஆதியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் உதயகுமார்(28). இவர் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே கல்லூரியில் படித்து வந்த மதுரையைச் சேர்ந்த சோனாலி(21) என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். உதயகுமார் கல்லூரிக்கு சரிவர வராததால் கல்லூரி நிர்வாகம் அவரை தேர்வெழுத அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து உதயகுமாருடன் பேசுவதை சோனாலி நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திர மடைந்த உதய குமார் கடந்த 2016 ஆக.30-ம் தேதி கல்லூரியில் இருந்த சோனாலியை கட்டையால் தாக்கி கொலை செய்தார்.

இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். வழக்கை விசாரித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார். அதில், கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 10 ஆண்டு சிறை,ரூ.10,000 அபராதம், ஆபாச மாக திட்டியதற்காக 3 மாத சிறை, ரூ.1,000 அபராதம், கட்டையால் தாக்கியதற்காக 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதம், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் விதித்து உத்த ரவிட்டார். இவற்றை ஏக காலத் தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும், அபராதத் தொகை ரூ.23,000-ஐ மாணவியின் தாயாருக்கு இழப்பீடாக வழங்க வும், இது தவிர மேலும் இழப்பீடு வழங்க கரூர் மாவட்ட இலவச சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர், அரசுக்கு பரிந்துரை செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x