Published : 30 Jan 2022 07:50 AM
Last Updated : 30 Jan 2022 07:50 AM
விழுப்புரம், திண்டிவனத்தில் நேற்று முன்தினம் போலீஸார் நடத்திய சோதனையில் 10 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை மாவட்ட போதைபொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து விழுப்புரம் வந்த அரசு பேருந்திலிருந்து இறங்கிய 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். இச்சோதனையில் அவர்கள் 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்திவருவது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் 2 பேரையுல் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஒடிசா மாநிலம் சபர்நாபூர் புத்தகாமன் பகுதியைச் சேர்ந்த பிஸ்வால் ராணா(27), குடாமெண்டா பகுதியைச்சேர்ந்த சித்தேஸ்வர் போய்(25) என தெரியவந்தது. இவர்கள் புவனேஸ்வரிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்துள்ளனர். அங்கிருந்து விழுப்புரத்திற்கு பேருந்தில் கஞ்சாவை கடத்திவந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 60 ஆயிரமாகும். இதையடுத்து அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதே போல் திண்டிவனத்தில் ரோஷணை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சென்னையிலிருந்து திருவண்ணாமலை சென்ற அரசு பேருந்திலிருந்து இறங்கிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்து சோதனையில் ஈடுபட்டனர். அதில், அவர்களிடம் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.40 ஆயிரம் ரூபாயாகும்.விசாரணையில் அவர்கள், சென்னை, தி.நகர், ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன்(22), சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் எனவும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் .திண்டிவனம், செஞ்சிஉள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்கு யாராவது கஞ்சா ஆர்டர் கொடுத்தால், சென்னையில் உள்ள கஞ்சா வியாபாரிகளிடமிருந்து வாங்கி பேருந்தில் கொண்டு வந்து டெலிவரி செய்வது வழக்கம்.ஆர்டரின் பேரில் திண்டிவனம், செஞ்சி பகுதிக்கு கஞ்சாபொட்டலங்களை கொடுப்பதற்காக பேருந்தில் கொண்டு வந்த போது சிக்கியது தெரியவந்தது.இது தொடர்பாக இருவரையும் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT