Published : 25 Jan 2022 01:30 PM
Last Updated : 25 Jan 2022 01:30 PM

கயத்தாறு: இளம்பெண் மர்ம மரணம் - சாலை மறியல்

கயத்தாறில் மர்மமான முறையில் இறந்த பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள் அந்த பெண்ணின் சடலத்துடன் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி

கயத்தாறில் பெண்ணின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு, உறவினர்கள் அந்த பெண்ணின் சடலத்துடன் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கயத்தாறு பேரூராட்சி தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சின்னத்துரை மனைவி ஜோதியம்மாள் (25). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 22-ம் தேதி ஆடு மேய்க்கச் சென்ற ஜோதியம்மாள், வடக்கு மயிலோடை சாலையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

ஜோதியம்மாள் மரணத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, கயத்தாறு காவல் நிலையம் முன்பு உறவினர்கள் நேற்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் பரிசோதனை முடிந்து ஜோதியம்மாள் உடல் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டது. புதிய பேருந்து நிலையம் முதல் இந்திரா நகர் வரை ஆம்புலன்ஸுடன் ஊர்வலமாக வந்த உறவினர்கள், அங்கு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

டிஎஸ்பி உதயசூரியன், வட்டாட்சியர் பேச்சிமுத்து, மண்டல துணை வட்டாட்சியர் திரவியம் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மறியல் கைவிடப்பட்டது. கடம்பூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர்கள் முத்து, பத்மாவதி, சபாபதி ஆகியோர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x