Published : 24 Jan 2022 09:24 AM
Last Updated : 24 Jan 2022 09:24 AM
புதுச்சேரியில் முழு ஊரடங்கு உத்தரவு வர இருப்பதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்தது போன்று, சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வல்லவன், கடந்த 7-ம் தேதி புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸில் புகாரளித்தார்.
அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணைமேற்கொண்டனர். விசாரணையில், புதுச்சேரி வில்லியனூர் அடுத் துள்ள உறுவையாறு பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து சைபர் க்ரைம் போலீஸார் பிரவீன் குமாரை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் தனது செல் போன் மூலம் இணையத்தில் வந்தஇதழ் ஒன்றில் முழு ஊரடங்கு சம்பந்தமாக ஆளுநர் தமிழிசை தெரிவித்தது போன்றிருந்த பழைய செய்தியை எடுத்து, அந்த செய்தியில் இருக்கும் தேதியை மறைத்து, புதிதாக்கி தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார். அனைவருக்கும் இதை அனுப்பினால் எல்லோ ருடைய கவனத்தையும் ஈர்க்கலாம் என்று எண்ணி விளையாட்டாக இதனை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் பயன்படுத்திய செல்போனை போலீஸார் பறி முதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT