Published : 24 Jan 2022 09:39 AM
Last Updated : 24 Jan 2022 09:39 AM

பெரியகுளம் அருகே யானை தந்தங்களை விற்க முயன்ற 9 பேர் கைது

யானைத் தந்தத்தை கடத்தி விற்க முயன்றதாக கைது செய்யப்பட்டவர்கள்.

பெரியகுளம்

பெரியகுளம் அருகே யானைத் தந்தங்களை விற்க முயன்ற 9 பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.

பெரியகுளம் அருகே தேவ தானப்பட்டியைச் சேர்ந்த சிலர், யானைத் தந்தங்களை பதுக்கி வைத்து விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஓய்வுபெற்ற வன அலுவலர் ஒருவரிடம் தந்தத்தின் தரம், விலை விவரம் குறித்து விசாரித்துள்ளனர்.

அவர் அளித்த தகவலின்பேரில் தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜ் தலைமையிலான வனத்துறையினர் தீவிர சோதனை யில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தேவதானப்பட்டி சோதனைச் சாவடி அருகே நேற்று சிலர் கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது வனக் காவலர் கருப்பையாவைத் தள்ளிவிட்டு தப்ப முயன்றனர். அதில் ஒருவர் தப்பி ஓடினார். 9 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். இதில் தப்பிச் சென்றவர் போடியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், இவர்தான் முக்கிய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து உசிலம்பட்டியைச் சேர்ந்த சின்னராசு(29), சிவக்குமார்(42), தேவதானப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன்(35), பிரகாஷ்(29), பாக்கியராஜ்(30), முத்தையா(57) வத்தலகுண்டுவைச் சேர்ந்த அப்துல்லா(34), தேனியைச் சேர்ந்த சரத்குமார்(30), விஜயகுமார்(60) ஆகிய 9 பேரை வனத் துறையினர் கைது செய்தனர். 2 யானைத் தந்தங்கள், மூன்று இரு சக்கர வாகனங்களை பறிமுதல் ெசய் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x