Published : 14 Jan 2022 06:00 AM
Last Updated : 14 Jan 2022 06:00 AM
பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்வதாகக் கூறி வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருடும் சம்பவங்கள் நடப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
தற்போது முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. 2-ம் தவணை தடுப்பூசிபோட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட பல்வேறு ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதாகவும், விருப்பம் உள்ளவர்கள் தங்கள்விவரங்களை பதிவு செய்யுமாறும் செல்போன் எண்ணுக்குஅழைப்புகள், குறுஞ்செய்திகள் வருகின்றன. மேலும் செல்போன் எண்ணுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி, அதில் விவரங்களை பதிவிடுமாறு தெரிவிப்பதுடன் செல்போன் எண்ணுக்கு வரும்ஓடிபி எண்ணை கேட்டுப் பெறுகின்றனர். லிங்க், ஓடிபி மூலம் செல்போனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மோசடி கும்பல் திருடுவதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற அழைப்பு, குறுஞ்செய்திகளை நம்பி, தவறானலிங்க்கை பதிவிறக்கம் செய்யவேண்டாம் என சைபர் கிரைம்போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT