மதுரை: வழிப்பறி கொள்ளையர் தாக்கியதில் காயமடைந்த பெண் மரணம்
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆசிரியர் தாமஸ் (57). இவரது மனைவி ஜோஸ்மின் ஜான்சிராணி (53). கடந்த மாதம் முதல் வாரத்தில் தாமஸ் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் மதுரை நகருக்கு வந்தார். பின்னர் வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, தோப்பூர் நான்குவழிச் சாலையில், அவரை பைக்கில் 2 பேர் பின்தொடர்ந்து வந்தனர்.
இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த ஜான்சிராணி அணிந்திருந்த தங்க செயினை திடீரென பறிக்க முயன்றனர். அப்போது நிலைதடுமாறி தாமஸும், ஜான்சிராணியும் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த ஜான்சிராணி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப
கடந்த இரு வாரத்துக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மனைவியை காண தாமஸ் பேருந்தில் வந்தார். அப்போது சிந்தாமணி டோல்கேட் பகுதியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
