Published : 31 Dec 2021 09:41 AM
Last Updated : 31 Dec 2021 09:41 AM
கடலூர்: பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு 18 வயதுக்கு உட்பட்ட மகள் உள்ளார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்தார். அச்சிறுமிக்கு 7 மாதத்தில் குழந்தை இறந்து பிறந்தது. இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பளித்தார். அச்சிறுமியின் தந்தையை இயற்கை மரணம் அடையும் வரையில் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று ஆயுள் தண்டனை விதித்தார். நன்னடத்தை, வயது மூப்பு என எக்காரணம் கொண்டும் அவரை முன்னரே விடுதலை செய்யக் கூடாது என்றும் தீர்ப்பளித்தார். மேலும் இதுகுறித்து அவர் மேல்முறையீடு செய்தால் பரிசீலிக்கக்கூடாது. தண்டனையை குறைக்கக்கூடாது. மேலும் அந்த சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் சமூக நல நலவாழ்வு நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் பெற்றுத்தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதில் அரசு தரப்பு வழக்கறிஞராக கலாசெல்வி ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT