Published : 29 Dec 2021 04:37 PM
Last Updated : 29 Dec 2021 04:37 PM

போலீஸ் உடையில் பெண்ணிடம் நகை பறிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி அலமேலு. கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் அலமேலு தன் மகனுடன் தனிமையில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் அலமேலு வீட்டில் தனியாக இருந்த போது, போலீஸ் உடையில் வந்த 3 நபர்கள், ‘சிறுமியை எங்கே கடத்தி வைத்திருக்கிறாய்?’ எனக் கேட்டுள்ளனர். முன்னுக்குப்பின் புரியாத வகையில் இப்படி எதையோ சொல்லி அலமேலுவை மிரட்டியுள்ளனர்.

தொடர்ந்து வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் நகை மற்றும் அலமேலு அணிந்திருந்த ஏழரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். கச்சிராயபாளையம் காவல்நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x