Published : 29 Dec 2021 04:18 PM
Last Updated : 29 Dec 2021 04:18 PM
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தொப்பு அண்ணா நகர் மசாஜ் பார்லரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 17 வயது சிறுமியை சில வாரங்களுக்கு முன்பு உருளையன்பேட்டை போலீஸார் மீட்டனர்.
விசாரணையில் அச்சிறுமியிடம் 40 பேர் வரை பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து சுனித்தா உள்ளிட்ட 40 பேர் மீது உருளையன்பேட்டை போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி, கல்லையன்குப்பத்தைச் சேர்ந்த பட்டதாரி லோகேஷ் (23) என்பவரை நேற்று முன்தினமும், விழுப்புரம் மாவட்டம் வெண்ணியூர் பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ் (32) என்பவரை நேற்றும் உருளையன்பேட்டை போலீஸார் கைது செய்தனர். இதுவரை 14 பேர் வரை இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT