Published : 27 Dec 2021 12:05 PM
Last Updated : 27 Dec 2021 12:05 PM
சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், கடந்த 6-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பவர்கள், கடத்துபவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கஞ்சா விற்பனை செய்தது, கடத்தியதாக 816 வழக்குகள் பதியப்பட்டு, 871 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.80 கோடி மதிப்புள்ள 1,774 கிலோ கஞ்சா, 164 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தியதாக 5,457 வழக்குகளில் 5,037 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.4.20 கோடிமதிப்புள்ள 40 டன் குட்கா பறிமுதல்செய்யப்பட்டது. இதேபோல, தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக 1,091 பேர் கைது செய்யப்பட்டு,ரூ.35 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் கைப்பற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT