Published : 26 Dec 2021 09:33 AM
Last Updated : 26 Dec 2021 09:33 AM
மதுரை: மதுரை திருமங்கலத்தில் ஆசிரியையின் வீட்டில் 75 பவுன் நகை, ரூ.1.45 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை திருமங்கலம் கிறிஸ்டியன் தெருவைச் சேர்ந்தவர் திருமாவளவன்(62). இவர் கூட்டுறவுவங்கியில் துணை பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது சிஎஸ்ஐ அற்புத ஆலயத்தின் பொறுப்பாளராக உள்ளார். இவரது மனைவி எபினேசர் பியூலா (58), விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களது மூத்த மகன் அரசு வங்கி துணை மேலாளராக பணி புரிகிறார், இளைய மகன் கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலைஎபினேசர் பியூலா பள்ளிக்கும், திருமாவளவன் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடு தொடர்பாக தேவாலயத்துக்கும் சென்றுவிட்டனர். இருமகன்களும் மதுரைக்குச் சென்றுஉள்ளனர்.
பின்னர் மாலையில் திருமாவளவன் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, முன்பக்க கதவை திறக்கமுடியவில்லை. பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றபோது, பீரோக்கள் திறந்து கிடந்தன. அதில்இருந்த பொருட்கள் அறையெங்கும் சிதறிக் கிடந்தன. 75 பவுன்தங்க நகைகள், ரூ.1.45 லட்சம் ரொக்கம் திருடுபோனது தெரிய வந்தது. மேலும் வீட்டின் பின்பக்கக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டுஇருந்தது.
வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தமர்ம நபர்கள், நகை மற்றும்பணத்தை கொள்ளையடித்துவிட்டு, முன்பக்கக் கதவை உள்பக்கமாக பூட்டிச் சென்றது தெரியவந்தது.
தடயங்கள் சேகரிப்பு
இது தொடர்பாக திருமங்கலம் நகர் காவல்நிலையத்தில் திருமாவளவன் புகார் தெரிவித்தார். தடயவியல் நிபுணர்கள், பீரோவில் பதிவாகியிருந்த கைரேகை பதிவுகளை சேகரித்தனர். மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனையிட்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT