Published : 04 Sep 2020 08:02 AM
Last Updated : 04 Sep 2020 08:02 AM

தாழம்பூர் அருகே குடோனில் பதுக்கிவைக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 டன் குட்கா பறிமுதல்: தனிப்படை போலீஸாரால் 3 பேர் கைது

தாழம்பூர் அருகே தனிப்படை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள்.

கேளம்பாக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்காஉள்ளிட்ட போதை பொருட்கள் அதிகஅளவில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க மாமல்லபுரம் சரக ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து உதவி ஆய்வாளர்கள் சரவணன், ராஜா மற்றும் செந்தில் ஆகியோர் நேற்று முன்தினம் இரவுதாழம்பூரை அடுத்த மேலக்கோட்டையூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கொலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பலராமன் என்பவருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ குட்கா, கண்டிகை பகுதி வியாபார சங்க தலைவர் பீர்முகம்மதுவின் குடோனில் 900 கிலோ மற்றும் ரத்தினமங்கலத்தைச் சேர்ந்த திவாகரின் குடோனில் 700 கிலோ என மொத்தம் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் என தெரிவித்த போலீஸார் மேற்கண்ட 3 நபர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் கூறியதாவது: தனிப்படை போலீஸாரின் தீவிர சோதனையில் தாழம்பூர் அருகே 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x