Published : 31 Aug 2020 07:09 PM
Last Updated : 31 Aug 2020 07:09 PM
திருநெல்வேலியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்திய கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வது, சேமிப்பது, விநியோகிப்பது, விற்பனை மற்றும் பயன்படுத்துவது ஆகியன தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கவும் அவற்றை தினசரி கண்காணிக்கும் விதமாக மாநகராட்சி பணியாளர்களால் உருவாக்கப்பட்ட கண்காணிப்புக்குழு ஆய்வுப்பணி மேற்கொண்டது.
பாளையங்கோட்டையில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகப்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் பிரேம்ஆனந்த் தலைமையிலான அதிகாரிகள் அந்த கடையை 10 நாட்களுக்கு பூட்டி சீல் வைத்தனர்.
கடந்த 01.01.2020 முதல் நேற்று 1414 சிறு மற்றும் குறு நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, 936 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 3 லட்சத்து 64 ஆயிரத்து 700 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT