Published : 17 Jun 2020 10:03 PM
Last Updated : 17 Jun 2020 10:03 PM
கரோனா ஊரடங்கில் மதுபானக் கடைகளுக்கு அனுமதி அளித்த நிலையில் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் கொலை,கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவருகிறது.
மேலும்,மதுபோதையில் குடிமகன்கள் பொது இடங்களில் இடையூறு செய்யும் சம்பவங்களும் அதிகரித்துவருகிறது, அதற்கு உதாரணமாக மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியில் உள்ள மதுபானகடையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் முதல் இளைஞர்கள் வரை மதுவை வாங்கி அதே பகுதியிலயே அமர்ந்து குடித்துவிட்டு மதுபோதையில் தினசரி பிரச்சினையில் ஈடுபட்டுவருகின்றனர்.
சிலர் அந்தப் பகுதிகளில் செல்லும் பெண்கள் முகம்சுளிக்கும் அளவிற்கு நடந்துகொள்ளும் அவலமும் ஏற்படுகிறது.
இந்நிலையில் அதே மதுபானக்கடையில் மது அருந்திய ஒருவர் மதுபோதையில் கருப்பாயூரணி சாலையில் லாவகமாக கால்மேல் கால்போட்டு படுத்துகொண்டு செய்த அட்டகாசத்தால் அந்த பகுதியில் சென்ற வாகனங்கள் நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் அருகில் வந்தும் சற்றும் கண்டுகொள்ளாத மதுப்பிரியர் எதையும் கண்டுகொள்ளாத நிலையில் வாகனங்கள் மெதுமெதுவாக அவரை கடந்துசென்றன.
அவரை மீட்க சென்றவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியதால் யாரும் அருகில் செல்லவில்லை. இந்நிலையில் 3 மணி நேரமாக சாலையில் கிடந்த அந்த நபர் மதுபோதை தெளிவாகி ஏதும் அறியாதவர் போல நடந்துசென்றார்.
மதுபோதையில் இளைஞர் செய்த அட்டூழியம் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT