Published : 05 Jun 2020 07:19 PM
Last Updated : 05 Jun 2020 07:19 PM
கரோனா காலத்தில் கடனுக்கு அபராத வட்டி வசூலித்ததால் சிவகங்கையில் தனியார் நிதி நிறுவனத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டு பூட்டு போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது. மூன்று மாதங்களாக மகளிர் சுயஉதவிக் குழுவினர், தொழிலாளர்கள் வேலையின்றி சிரமப்படுகின்றனர். இதனால் அவர்களால் கடன் தவணைத் தொகையை செலுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும் மத்திய ரிசர்வ் வங்கியும் கடன் தவணைத் தொகையை செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி சில நிதி நிறுவனங்கள், நுண் கடன் நிறுவனங்கள் கடன் தொகையை வசூலித்து வருகின்றன.
இதையடுத்து ஊரடங்கு காலத்தில் கடன்தொகையை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் சிவகங்கை மதுரை ரோட்டில் உள்ள தனியார் நிதிநிறுவனம் ஊரடங்கு காலத்தில் கடனுக்கு அபராத வட்டி வசூலிப்பதாகக் கூறி, அந்நிறுவனத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பூட்டு போட முயன்றனர்.
அவர்களிடம் நிதிநிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீஸார் சமரசத்தை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அபராத வட்டி வசூலித்தால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக இளைஞர்கள் தெரிவித்தனர். நிதிநிறுவன அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT