Published : 04 Jun 2020 05:32 PM
Last Updated : 04 Jun 2020 05:32 PM
பெரம்பலூர் அமமுக மாணவரணி நகரச் செயலாளர் வல்லத்தரசு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கரூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.
பெரம்பலூர் சங்குப்பேட்டையைச் சேர்ந்தவர் பாண்டி என்கிற வல்லத்தரசு (24). இவர் அமமுக மாணவரணி நகரச் செயலாளராக இருந்தார். கடந்த 2-ம் தேதி, பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் அவரது நண்பர் சூர்யா (25) உடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று இருவரையும் சரமாரியாக வெட்டியதில் வல்லத்தரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சூர்யா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பெரம்பலூர் சங்குப்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (30), விஜயராஜ் (30), கார்த்திக் (30), ராஜா (54) ஆகிய 4 பேர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மாஜிஸ்திரேட் சரவணபாபு முன்னிலையில் இன்று (ஜூன் 4) சரணடைந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி 4 பேரையும் 5 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கவும், 9-ம் தேதி பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் குளித்தலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT