Last Updated : 31 May, 2020 04:56 PM

 

Published : 31 May 2020 04:56 PM
Last Updated : 31 May 2020 04:56 PM

அரசுப்பணி வாங்கித் தருவதாக பண மோசடி: போலி ஐஏஎஸ் அதிகாரி கைது

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் அரசுப்பணி வாங்கித் தருவதாக ரூ.15,00,000 லட்சம் மோசடி செய்த போலி ஐஏஎஸ் அதிகாரியை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் புலிக்காரத் தெருவைச் சேர்ந்த ஜெசுடியான் தனராஜ்(75). இவரது மனைவி டெய்சி(61). இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களது மகள் சைனி தூத்துக்குடி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சைனியின் கணவர் ஜூபல் என்பவருக்கு அரசு வேலை வாங்க முயற்சித்துள்ளனர். அப்போது சென்னையில் சுகாதாரத்துறையில் உதவியாளராக பணியாற்றும் ஜார்ஜ் பிலிப் என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது.

அவர் தனக்கு தெரிந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மூலம் அரசுப் பணி வாங்கித்தருவதாக கூறியுள்ளர். இதை நம்பிய டெய்சி தனது மருமகன் ஜூபல், சகோதரியின் மகன் டேவிட் ராஜராஜன், உறவினர் நவீன் ஆகியோருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுப் பணி வாங்கித்தரக் கோரியுள்ளார்.

அதன்படி 3 பேருக்கும் அரசுப் பணி வாங்கித் தருவதாக ஜார்ஜ் பிலிப்பும், ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறிக் கொண்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரகாஷ் என்ற நாவப்பனும் ஓய்வு பெற்ற ஆசிரியை டெய்சியிடம் ரூ.15,00,000 பணம் பெற்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கித்தரவில்லை. பின்னர் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டும் தரவில்லை. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமாரிடம், டெய்சி புகார் அளித்தார். காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அரசுப் பணி வாங்கித்தருவதாக பண மோசடி செய்த போலி ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் என்ற நாவப்பனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுகாதாரத்துறை ஊழியர் ஜார்ஜ் பிலிப்பை தேடி வருகின்றனர்.

பிரகாஷ் ஏற்கெனவே 2019-ல் அரசுப்பணி வாங்கிருத்தருவதாக பலரிடம் மோசடி செய்த வழக்கில் கைதாகி பின்னர் பிணையில் வந்துள்ளார் எனவும், அதன்பின் தற்போது போலி ஐஏஎஸ் அதிகாரியாக வலம் வந்து ராமநாதபுரத்தில் ரூ.15,00,000 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இவர்கள் பல்வேறு நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனரா எனவும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x