Published : 24 May 2020 06:16 PM
Last Updated : 24 May 2020 06:16 PM
குமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட குளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உடும்பு, மலைப்பாம்பு, மரநாய் போன்றவற்றை வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் அச்சங்குளம் பகுதியில் பறவைகள் சரணாலயத்தில் உள்ள தடை செய்யப்பட்ட குளத்தில் இருவர் வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர் மீன் பிடித்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மாணிக் ராஜ், சிவகுமார் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசி கொண்டிருந்தனர்.
இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அவர்களின் செல்போனை ஆய்வு செய்த போது, அச்சன்குளத்தை சேர்ந்த தினேஷ், தாவீது ஆகிய தங்களது நண்பர்களுடன் சேர்ந்து ஆமை, மலைப்பாம்பு, உடும்பு, மரநாய் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது செல்போனில் இருந்த வீடியோ மூலம் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மாணிக்க ராஜ், சிவகுமார் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தடை செய்யப்பட்ட குளத்தில் மீன் பிடித்த குற்றத்திற்காக மாணிக்கராஜ்க்கு ரூபாய் 25000 அபராதம் விதித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தினேஷ் தாவீது ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT