Published : 19 May 2020 11:42 AM
Last Updated : 19 May 2020 11:42 AM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதி ரேஷன்கடைகளில் முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு அபாதம் விதிக்கப்பட்டது.
கரோனா தொற்றை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரேஷன்கடைகளில் மாதந்திர பொருட்களுடன், பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா சிறப்புத் திட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ கூடுதலாக அரிசி வழங்கப்படுகிறது.
இதையடுத்து இம்மாதம் மே மாதத்திற்குரிய அரிசி, மே மாதத்திற்குரிய சிறப்புத் திட்ட அரிசி, ஏப்ரலில் விடப்பட்ட சிறப்புத் திட்ட அரிசியில் 50 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் பல ரேஷன்கடைகளில் முறையாக பொருட்கள் வழங்கவில்லை என புகார் எழுந்தது. கடந்த வாரம் காரைக்குடி கீழத்தெரு பாம்கோ ரேஷன்கடையில் முறைகேடு செய்த விற்பனையாளர் பாலு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் முறைகேடுகளை தடுக்க கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்யசுகுமார் தலைமையில் பொதுவிநியோகத் திட்ட துணைப்பதிவாளர் ராமமூர்த்தி, சிவகங்கை சரக துணைப்பதிவாளர் ராஜேந்திரன், பாம்கோ மேலாண்மை இயக்குநர் திருமாவளவன், சார் பதிவாளர் செல்வராஜ் ஆகியோரை கொண்ட பறக்கும்படை காரைக்குடி வட்டத்தில் உள்ள 30 ரேஷன்கடைகளில் ஆய்வு செய்தது.
இதில் சில கடைகளில் 239 கிலோ அரிசி, 37.5 கிலோ சர்க்கரை, 28 கிலோ கோதுமை, 45.5 கிலோ துவரம் பருப்பு, 36 கிலோ லிட்டர் பாமாயில் இருப்பு குறைந்தன. இதையடுத்து முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT