Last Updated : 28 Apr, 2020 07:03 PM

1  

Published : 28 Apr 2020 07:03 PM
Last Updated : 28 Apr 2020 07:03 PM

பெண்களிடம் மோசடி: நாகர்கோவில் இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது

நாகர்கோவில்

பெண்களிடம் பழகி பணம், நகைகளை பறித்த நாகர்கோவில் இளைஞருக்கு நெருக்கமான நண்பர், மற்றும் உறவனர்கள் வீடுகளில் தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர்.

காசி மீது பழைய புகார்களும் குவிந்து வருவதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி என்ற சுஜி(26) பெண்களிடம் பழகி காதலிப்பது போன்று நடித்து அவர்களிடம் இருந்து பணம், மற்றும் நகைகளை பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி என்ற சுஜி(26) பெண்களிடம் பழகி காதலிப்பது போன்று நடித்து அவர்களிடம் இருந்து பணம், மற்றும் நகைகளை பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகளை தொடங்கி பல பணக்கார பெண்களை ஏமாற்றியிருப்பது சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் கொடுத்த புகார் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

காசியால் ஏமாற்றப்பட்ட பெண்கள் தயக்கமின்றி புகார் தெரிவிக்குமாறும், இவ்விஷயத்தில் ரகசியம் காக்கப்படும் எனவும் குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

இதனால் காசியால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அவர் நடத்திய காதல் நாடகத்தையும், அதன் மூலம் பணம் பறித்ததையும் போலீஸாரிடம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். 50க்கும் மேற்பட்ட பெண்களை காசி இதுபோன்று ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் 3 தனிப்படையினர் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காசியின் வீடு, மற்றும் அவரது தந்தை நடத்தி வரும் கோழிக்கடை போன்றவற்றில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் லேப்டாப், செல்போன், ஹார்ட் டிஸ்க் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதில் அவர் ஏமாற்றிய பெண்களின் புகைப்படங்கள், வீடியோ, மற்றும் அரசியல் பிரமுகர்கள், காசியின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களின் படங்கள் இருந்தன.

அதன் அடிப்படையில் நாகர்கோவிலை சேர்ந்த கட்சி பிரமுகரான வழக்கறிஞர், பேக்கரி கடை உரிமையாளர், மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தனிப்படையினர் 3 மணி நேரத்திற்கு மேல் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. விசாரணையில் பிளஸ் 2 படிக்கும் போதே காசி நாகர்கோவிலில் பணக்கார மாணவிகளை குறிவைத்து தனது மோசடியை அரங்கேற்றியிருப்பதும், தொடர்ந்து இதுநாள் வரையில் இச்செயலில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

எனவே ஏற்கெனவே ஏமாற்றப்பட்ட பெண்கள் தரப்பில் இருந்து ரகசியமாக புகார்களை போலீஸார் பெற்று வருகின்றனர். ஏற்கனவே பழையக வழக்குகள் பல காசி மீது பாயவுள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் போலீஸார் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x