Published : 20 Apr 2020 05:41 PM
Last Updated : 20 Apr 2020 05:41 PM
கரோனா ஊரடங்கால் மதுரையில் விபத்து மரணங்கள் குறைந்துள்ளது. 26 நாளில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
மதுரை நகரில் 17 லட்சத்துக்கு அதிகமாக மக்கள் வசிக்கின்றனர். சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் ஓடுகின்றன. வாரத்திற்கு எப்படி பார்த்தாலும், 10 -12 சாலை விபத்துக்கள் நிகழும். இதன்மூலம் மாதத்தில் 15 நபர்கள் இறக்க வாய்ப்பு நேரிடும்.
கடந்த 2018-ல் பல்வேறு சாலை விபத்துக்களில் 200 பேர் உயிரிழந்தனர். இதை குறைக்க, சாலைகளில் தடுப்புவேலிகள், தலைக்கவசம் உள்ளிட்ட போக்குவரத்து வீதிமீறல்களைத் தடுக்க, வாகனத் தணிக்கை அதிகரிப்பு போன்ற காவல்துறை தொடர் நடவடிக்கைகளை எடுத்தது.
இதன் காரணமாக கடந்தாண்டு சாலை விபத்து மரணம் 185 ஆக குறைக்கப்பட்டது. 2020-ம் ஆண்டிலும் வாகன விபத்துக்களைக் குறைத்து, மனித உயிரிழப்பைத் தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மதுரை நகரில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது. ஊரடங்கு அமல்படுத்தி ஒரு மாதமாகும் சூழலில் குறைந்த 12 விபத்துகள் வரை நடந்திருக்கும். 3 முதல் 4 மரணம் வரை சென்றிருக்க வாய்ப்புள்ளது.
ஆனாலும், இது வரை ஒரே ஒரு சாலை விபத்து மரணம் மட்டுமே நிகழ்ந்துள்ளது. உச்சப்பரம்பு மேடு பகுதியில் கார் மோதி பைக்கில் சென்றவர் ஒருவர் உயிரிந்தார்.
இந்த ஊரடங்கு உத்தரவால் மதுரை நகரில் விபத்து காயம், மரணம் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு ஊரடங்கே காரணமாக இருந்தாலும், இயல்பு நிலை திரும்பும்போது, விபத்துக்களைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT