Published : 10 Mar 2020 09:55 AM
Last Updated : 10 Mar 2020 09:55 AM
இளையான்குடியில் தாறுமாறாக ஓடிய பேருந்தை சிறைபிடித்த மக்கள்.
இளையான்குடியில் குடிபோ தையில் தாறுமாறாகப் பேருந்து ஓட்டிய ஓட்டுநருக்கு அடி, உதை விழுந்தது. மேலும் அவருக்குப் போலீஸார் அபராதம் விதித்தனர்.
பரமக்குடியில் இருந்து சிவ கங்கைக்கு நேற்று மாலை தனி யார் பேருந்து வந்தது. அதில் எமனேசுவரத்தில் இருந்து கைக் குழந்தையுடன் ஏறிய பெண் ஒருவர், இளையான்குடி அருகே அக்பர்மா தர்ஹாவுக்கு வந்தார்.
பேருந்து நிறுத்தம் வந்ததும் நடத்துநர் நிறுத்தச் சொல்லியும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவில்லை.
இதுகுறித்து கேட்ட அப்பெண் ணை ஓட்டுநர் செல்வக்குமார் தகாத வார்த்தைகளால் பேசியு ள்ளார். மேலும் அவரை வேறொரு நிறுத்தத்தில் இறக்கிவிட்டார். அதைத் தொடர்ந்து பேருந்தை வேகமாக இளையான்குடிக்கு தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார்.
அதைப் பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் சிலர் பேருந்தை விரட்டி வந்து இளையான்குடி பஜார் பகுதியில் நிறுத்த முயன் றனர். ஆனால் இடையில் நிறுத் தாமல் இளையான்குடி பேருந்து நிலையத்தில் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார்.
அங்கு கூடிய பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்தனர். மேலும் ஓட்டுநர் குடிபோதையில் பேருந்தை ஓட்டியது தெரிய வந் தது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் செல்வக்குமாரை பேருந்தை விட்டு இறக்கி தாக்கினர்.
இளையான்குடி போலீஸார் பொதுமக்களிடம் இருந்து ஓட்டுநரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குடிபோதையில் இருப் பதை உறுதி செய்தனர். குடி போதையில் பேருந்தை ஓட்டிய செல்வக்குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் பயணிகள் வேறு பேருந்தில் சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT