Published : 01 Feb 2020 05:15 PM
Last Updated : 01 Feb 2020 05:15 PM
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதற்காக மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டார்.
திருப்புவனம் வாவியரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் பேஸ்புக்கில் மோகன்முத்து என்ற பெயரில் கணக்கு தொடங்கி ராஜ்மோகன் என்பவர் சமூக வலைத்தளங்களில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பற்றி அவதூறாக சில கருத்துகளைப் பதிவேற்றம் செய்திருந்தார்.
குறிப்பாக திருப்புவனம் வாரச்சந்தை பிரச்சினையில் ஆட்சியரின் நடவடிக்கை, உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியப் பெருந்தலைவர் தேர்வு செய்வதில் இரண்டு முறை சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி தள்ளி வைத்தது ஆகியனவற்றை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.
மேலும், மாவட்ட ஆட்சியரின் பதவியினை கேலியாக சித்தரித்தும் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருப்புவனம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT