Published : 14 Dec 2019 06:37 PM
Last Updated : 14 Dec 2019 06:37 PM

வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

தனது கணவரை சிறையில் அடைத்த பின்னரும் தொடர்ந்து வீட்டை மறித்து சுவர் எழுப்பும் நபர் குறித்து புகார் அளித்தும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதை அடுத்து மனமுடைந்த பெண் குழந்தைகளுடன் காவல் ஆணையர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சித்தார்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாரைப்பெற்று சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் குறைகேட்பு பிரிவு செயல்படுகிறது. தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிப்பதன்மூலம் மேலதிகாரிகள் கவனத்திற்கு புகார் கொண்டுச் செல்லப்படுகிறது. இதன்மூலம் தீர்வு கிடைக்கிறது.

இன்று காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தன் பிள்ளைகளுடன் வந்த மாதவரம் , பொன்னியம்மன் மேடு பகுதி ஆட்டோ ஓட்டுநராக உள்ள சேக் முகமது என்பவர் மனைவி சரஸ்வதி என்பவர் திடீரென டீசலை தன் மீதும், தன் குழந்தைகள் மீதும் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். வாயிலில் உள்ள காவலர்கள் சரஸ்வதியை தடுத்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் இவர் வீட்டின் முன்பு அகஸ்டின் என்பவர் பாதையை மறித்து கட்டுமானம் கட்டி வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனது கணவர் ஷேக் முகம்மதுவை அகஸ்டினை தாக்கியதாக போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்ததாகவும், ஆனாலும் அகஸ்டின் என்கிற அந்த நபர் தொடர்ந்து வீட்டின் முன் பகுதியில் கட்டுமானத்தை துவக்கி தகராறு செய்வதாகவும் அகஸ்டின் மீது மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை, அதனால் என் குறையைச் சொல்ல வேறு வழித்தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x