Published : 30 Nov 2019 04:22 PM
Last Updated : 30 Nov 2019 04:22 PM

உடுமலை கவுசல்யாவின் தாய், பாட்டி கஞ்சா வழக்கில் கைது 

இடது கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, வலது பாட்டி கோதையம்மாள்

பழநி

உடுமலைப்பேட்டையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கர் மனைவி கவுசல்யாவின் தாய் மற்றும் பாட்டி ஆகியோரை கஞ்சா வழக்கில் பழநி போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே குப்பம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பழநி தாலூகா போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கஞ்சா விற்பனை செய்த கோதையம்மாள்(70) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் இவருக்கு பழநி எம்.ஜி.ஆர்., நகரில் வசிக்கும் இவரது மகளும் சின்னச்சாமியின் மனைவியுமான அன்னலட்சுமி(40) கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அன்னலட்சுமியையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒன்றேமுக்கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அன்னலட்சுமி, உடுமலை கவுசல்யாவின் தாயார், கோதையம்மாள் அவரது பாட்டி ஆவார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கடந்த 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி தனது மகள் கவுசல்யாவை திருமணம் செய்ததற்காக சங்கர் என்பவரை ஆணவபடுகொலை செய்த வழக்கில் சின்னச்சாமி, அன்னலட்சுமி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இதில் சின்னச்சாமி உள்ளிட்ட ஆறு பேருக்கு தூக்குதண்டணையும், அன்னலட்சுமி உள்ளிட்ட மூவர் விடுதலையும் செய்யப்பட்டனர்.

ஆணவக்கொலை வழக்கில் விடுதலையான உடுமலை கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி தற்போது முதன்முறையாக கஞ்சா வழக்கில் கைதாகியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x