Published : 27 Nov 2019 12:23 PM
Last Updated : 27 Nov 2019 12:23 PM
சிவகாசியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசி நேரு காலனியை சேர்ந்த முருகனும் அண்ணா நகரை சேர்ந்த அர்ஜுனனும் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இருவர் மீதும் கொலை கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ள நிலையில் இருவரும் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டு ஒருவர் காரணேசன் சந்திப்பு பகுதியிலும் மற்றொருவர் நேரு காலனியிலும் வீசப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் உத்தரவின் பேரில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட முருகனுக்கு சுதா என்ற மனைவியும், 8 வயதில் நாகபாலா என்ற மகன் உள்ள நிலையில் மனைவி சுதா தற்பொழுது 7 கர்ப்பிணியாக உள்ளார். மற்றொரு கொலையுண்ட நபர் அர்ஜுனனிற்கு சத்தியா என்ற மனைவியும் 12 வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில் இருவரும் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை சுதா மற்றும் சத்தியா ஆகிய இருவரும் கொடுத்த தகவலின்படி மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பாலமுருகனின் தந்தையை பிடித்து விசாரணை நடத்தியதில் போலீஸாருக்கு பாலமுருகன் மீது சந்தேகம் எழுந்ததால் தலைமறைவாக இருந்த பாலமுருகனை திருத்தங்கல் பகுதியில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட முருகன் மற்றும் அர்ஜுனனுக்கும் அவருடன் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சக தொழிலாளியான சின்னராமு மற்றும் வேல்முருகன் ஆகிய இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதனிடையே இவர்கள் இரு தரப்புகளுக்கிடையே நடைபெறும் பிரச்னையை மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பாலமுருகன் கட்டப்பஞ்சாயத்து செய்து தீர்ப்பது போல் பேசி சின்னராமு மற்றும் வேல்முருகன் ஆகிய இருவருக்கும் ஆதரவாகவே நடந்து கொண்டு முருகன் மற்றும் அர்ஜுனனை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முருகனும் அட்ஜுனனும் கட்டப்பஞ்சாயத்து நடத்திய பாலமுருகன், சின்னராமு மற்றும் வேல்முருகன் ஆகிய 3 பேரையும் கொலை செய்ய கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் விருதுநகரில் உள்ள கூலிப்படை ஒன்றிற்கு முன் பணம் கொடுத்துள்ளனர். அப்போது கூலிப்படையை சேர்ந்த ஒருவர் கொலை செய்ய அடையாளம் காட்டப்பட்ட சின்னராமுவிற்கு நெருக்கமான நபர் என்பதால் சின்னராமுவிடம் உன்னை கொலை செய்ய முருகன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் தன்னிடம் பணம் கொடுத்துள்ளதாகவும் தப்பித்து கொள்ளுங்கள் என எச்சரித்துள்ளார்.
சுதாரித்துக் கொண்ட சின்னராமு, பாலமுருகன், வேல்முருகன் ஆகிய 3 பேரும் முருகன், அர்ஜுனன் இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இருவரையும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த பாலமுருகன் கடந்த 25ம் தேதி மாலை 7 மணியளவில் போன் மூலம் அழைத்துள்ளார்.
அவரை நம்பி சென்ற இருவரையும் சிவகாசி அடுத்துள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று மது வாங்கிக்கொடுத்து மது போதை உச்சத்தை எட்டிய நிலையில் 7 பேர் கொண்ட கும்பல் முருகன் மற்றும் அர்ஜுனனை பீர் பாட்டில் மற்றும் கட்டையால் சராமரியாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் பாலமுருகன் தனது நண்பரான சரவணகுமாரை இரு சக்கர வாகனத்தில் வரவழைத்து அர்ஜுனனை சரவணகுமாரின் இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பதட்டமடைந்த சரவணகுமார் பாதி வழியிலேயே அர்ஜுனனை இறக்கிவிட்டு செல்ல ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளர். இதேபோல் முருகனையும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து நேரு காலனியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த கொடூரமான கொலை சம்பவம் தொடர்பாக பாலமுருகன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சக சுமை தூக்கும் தொழிலாளர்களான சின்னராமு, வேல்முருகன், சக்திவேல், காளிராஜன், சபரீஸ்வரன், மாரீஸ்வரன் மற்றும் சரவண குமார் (ஓட்டுநர்)
ஆகிய 8 பேரை கைது செய்து சிவகாசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT