Published : 09 Nov 2019 02:22 PM
Last Updated : 09 Nov 2019 02:22 PM
விருதுநகர்
தவறான ரயிலில் ஏறிவிட்டதை உணர்ந்து அவசரமாக இறங்கியபோது நகை, பணம் இருந்த பையைத் தவறவிட்ட இளைஞரின் உடைமைகளைத் துரிதமாக செயல்பட்ட ரயில்வே போலீஸார் மீட்டுக் கொடுத்தனர்.
மதுரையைச் சேர்ந்தவர் சடேஷ். இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் செல்வதற்காக மதுரை ரயில் நிலையத்திலிருந்து இன்டர்சிட்டி விரைவு ரயிலில் செல்வதற்காக வந்தார்.
ஆனால் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் ஏறுவதற்குப் பதிலாக தவறுதலாக நாகர்கோவில் நோக்கி செல்லும் அந்தியோதயா ரயில் ஏறியுள்ளார்.
பின்னர் அவசரமாக கீழே இறங்கி ரயில் மாறியபோது தனது பேக்கை அந்தியோதயா ரயிலிலேயே விட்டுவிட்டு இறங்கியதை உணர்ந்துள்ளார்.
அந்தப் பையில் 3 பவுன் நகை ரூ.7,200 பணம் இருந்தது. இதுகுறித்து மதுரை ரயில்வே காவல் துறையில் அவர் புகார் தெரிவித்தார். இ
துபற்றி விருதுநகர் ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
துரிதமாக செயல்பட்ட ரயில்வே போலீஸார் விருதுநகர் வந்த அந்தியோதயா விரைவு ரயிலில் சடேஷ் தவறவிட்ட பேக்கை கண்டுபிடித்தனர். பின்னர் அதில் இருந்த நகை மற்றும் பணத்தை சடேஷிடம் ஒப்படைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT