Published : 05 Nov 2019 10:18 AM
Last Updated : 05 Nov 2019 10:18 AM
மதுரை
மதுரையில் ஏடிஎம் மையங்கள், வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டு துளையிடும் இயந்திரம், இரும்பு வெட்டும் இயந்திரம் மற்றும் காஸ் கட்டருடன் காரில் சுற்றித் திரிந்த 4 பேரை திருப்பரங்குன்றம் போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் (32) ( நாகராஜ் ( 31) மனோஜ்குமார் (30) சபரி (35). இவர்கள் நால்வரும் தேனியில் இருந்து நேற்று கார் மூலம் மதுரை வந்துள்ளனர்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் நேற்றிரவு இருசக்கார வாகனம் ஒன்றைத் திருடியுள்ளனர். பின்னர் அங்கிருந்து அவனியாபுரத்துக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
உறவினருடன் சேர்ந்து திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் வீடுகளிலும் கைவரிசை காட்ட திட்டமிட்டிருக்கின்றனர்.
இதற்காக சுவரில் துளையிடும் இயந்திரம், இரும்பை வெட்டும் இயந்திரம் மற்றும் காஸ் கட்டர் ஆகியவற்றுடன் பாம்பன் நகரை நோட்டமிட்டனர்.
அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த திருப்பரங்குன்றம் போலீஸார் அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்துள்ளனர். முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததால் அவர்களை தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
4 பேரையும் கைது செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT