Published : 22 Oct 2019 09:39 AM
Last Updated : 22 Oct 2019 09:39 AM
விழுப்புரம்
சென்னை, ஜாம்பஜாரைச் சேர்ந் தவர் மலர்கொடி (51). எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். இவரது மகன் அழகுராஜா (31). ரவுடியான இவர் மீது பல வழக்குகள் உள்ளன.
கடந்த 10ம் தேதி மலர்கொடி தனது மகன் அழகுராஜா மற்றும் ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (20), விஜயகுமார் (20) உள்ளிட்ட மேலும் சில ருடன் ஆட்டோ ஒன்றில் எழும்பூர் சென்றார். பின்னர், அதே ஆட்டோ வில் அங்கிருந்து வீடு திரும்பி யுள்ளார். இதை நோட்டம் விட்ட கும்பல் ஒன்று புதிய தலைமைச் செயலகம் அருகே பிளாக்கர்ஸ் சாலையில் செல்லும்போது மற்றொரு ஆட்டோவில் வழி மறித்து அரிவாளால் வெட்டியது. இதில், மலர்கொடி காயமடைந்தார். அப்போது அழகுராஜா ஆட்டோவில் தயாராக வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து எதிர் தரப்பினர் மீது வீசினார். இதில் காயமடைந்த மலர்கொடி உள்ளிட்டோரை போலீஸார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனை தொடர்ந்து அழகுராஜா, அவரது தாயார் மலர்கொடி, அவரது ஆதரவாளர்கள் மணிகண்டன், விஜயகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் அழகுராஜாவின் கூட்டாளி என கூறப்படும் பல்லாவரத்தைச் சேர்ந்த கவுதம் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதற்கிடையில் அழகுராஜா மற்றும் அவரது தாயார் மீது தாக்குதல் நடத்தியது மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவக்குமார் தரப்பினர் என போலீஸார் சந்தேகப்பட்டு, அவரைத் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மேல்மலையனூரில் பதுங்கி இருப் பதாக தகவல் கிடைத்தது. வளத்தி போலீஸார் சிவகுமார் (40) மற்றும் அவரது கூட்டாளி ராஜ்குமார் (24) ஆகியோரை நேற்று துப்பாக்கி முனையில் கைது செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். ரவுடி சிவக்குமார் மீது இரட்டை கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT