Published : 19 Oct 2019 08:06 AM
Last Updated : 19 Oct 2019 08:06 AM

வங்கி கொள்ளை வழக்கில் முருகன் கூட்டாளி கணேசனிடம் விசாரிக்க போலீஸுக்கு அனுமதி: விற்கப்பட்ட நகைகளை மீட்க தனிப்படை தீவிரம்

திருச்சி

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் முருகனின் கூட்டாளியான கணேசனிடம் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திருச்சி சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிச்சாண்டார் கோயில் கிளையில் கடந்த ஜன.26, 27-ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் வங்கியின் சுவரை துளையிட்டு, லாக்கர்களை உடைத்து நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். வங்கியிலிருந்து 470 பவுன் நகை கள், ரூ.19 லட்சம் கொள்ளை போன தாக கொள்ளிடம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக 4 தனிப்படை அமைத்து போலீஸார் விசாரித்து வந்தனர்.

9 மாதங்களுக்குப் பிறகு தஞ் சாவூர் மாவட்டம் புதுக்குடி அருகே உள்ள காமாட்சிபுரம் நடுத்தெரு வைச் சேர்ந்த ரெங்கராஜ் மகன் ராதாகிருஷ்ணன்(28) என்பவரை வத்தலகுண்டு அருகே கடந்த அக். 14-ம் தேதி கைது செய்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணை யில் பிரபல கொள்ளையன் முருகன், அவரது சகோதரி மகன் சுரேஷ், வாடிப்பட்டி அருகேயுள்ள தெத்தூரைச் சேர்ந்த தனது உற வினர் கணேசன் ஆகியோருடன் சேர்ந்து இக்கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இவர்களில் முருகனை பெங்களூரு போலீஸாரும், சுரேஷை திருச்சி மாநகர போலீஸாரும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கணேசனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கொள்ளி டம் போலீஸார் ஸ்ரீரங்கம் நீதிமன் றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிவ காமசுந்தரி, கணேசனிடம் 7 நாட் கள் விசாரிக்க காவல் துறை யினருக்கு நேற்று அனுமதி அளித்தார்.

இதையடுத்து தனிப்படை போலீஸார் கணேசனை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியபோது, "பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கணேசன் மூலமாக மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பலரிடம் விற் பனை செய்யப்பட்டுள்ளதாக தெரி யவந்துள்ளது. எனவே, கணேசனி டம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் கொள்ளைய டிக்கப்பட்ட நகைகள் யார், யாரிடம் உள்ளன என்பதை கண்ட றிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்" என்றனர்.

கனகவல்லிக்கு காவல் நீட்டிப்பு

இதற்கிடையே லலிதா ஜூவல் லரி நகைக் கொள்ளை வழக்கில் கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சுரேஷின் தாய் கனகவல் லியை நேற்று ஜே.எம்-2 நீதி மன்றத்தில் நீதிபதி திரிவேணி முன் ஆஜர்படுத்தினர். கனகவல்லியின் நீதிமன்ற காவலை நவ.1-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x