Published : 16 Oct 2019 08:50 AM
Last Updated : 16 Oct 2019 08:50 AM
திருச்சி
திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பி லான தங்க, வைர நகைகள் கொள்ளை யடிக்கப்பட்ட வழக்கின் முக்கிய குற்ற வாளியான சுரேஷை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று தனிப்படை போலீ ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது சுரேஷ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸார் கூறியதாவது:
லலிதா ஜூவல்லரியில் கொள்ளை யடிப்பதற்கு பல நாட்களுக்கு முன்பே முருகன், சுரேஷ், கணேசன் ஆகிய 3 பேரும் அடிக்கடி அந்த கடைக்கு வந்து உட்புறம், வெளிப்புறம் போன்றவற்றை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் எப்படி உள்ளது என்பதையும் பல நாட்கள் கண்காணித்துள்ளனர். அப்போது, காவ லர்கள் பெரும்பாலும் முன்பகுதியி லேயே அமர்ந்திருப்பதைக் கண்டு, அதையே தங்களுக்குச் சாதகமாக்கி கொண்டனர்.
கொள்ளையடிக்கத் திட்டமிட்டதும், அதற்குத் தேவையான பொருட்களை 4 நாட்களுக்கு முன்பாகவே அந்த பகுதிக்கு எடுத்துவந்து புதர்களுக்குள் போட்டு வைத்துள்ளனர். பின்னர் முரு கன், சுரேஷ் ஆகியோர் 2 நாட்களும், முருகன், கணேசன் ஆகியோர் 2 நாட் களும் என தொடர்ச்சியாக 4 நாட்கள் இரவு நேரத்தில் அந்த கடையின் சுவரை, வெளியே சத்தம் கேட்காத அளவுக்கு சுத்தியலால் கொஞ்சம், கொஞ்சமாக உடைத்துள்ளனர்.
கடைசி நாளன்று சுவரின் உள்பகுதியில் இருந்த பிளை வுட்டை சுத்தியால் உடைத்தால், அதிக சத்தம் வரும் என்பதால் ஜாக்கி உதவி யுடன் உடைத்துள்ளனர். அதன்பின் முருகனும், கணேசனும் உள்ளே சென்று நகைகளை திருட, சுரேஷ் வெளியில் இருந்து கண்காணித்துள்ளார்.
நகைகளை திருடியதும் அருகிலுள்ள வி.என்.நகர் பகுதி வழியாக வெளியேறி காரில் மதுரைக்குச் சென்றுள்ளனர். அங்கு கணேசனின் வீட்டில் வைத்து நகைகளை பங்கிட்டுள்ளனர். ஒவ்வொரு கொள்ளையிலும் கிடைக்கக்கூடிய நகைகளில் முருகனுக்கு 50 சதவீதம், மீதமுள்ள 50 சதவீதத்தை மற்றவர்கள் பிரித்துக் கொள்வதும் வாடிக்கையாக இருந்துள்ளது. அதன்படியே தற்போதும் முருகனுக்கு சுமார் 12.5 கிலோ தங்க நகைகள், 800 கிராம் வைர நகைகள், சுரேஷ் மற்றும் கணேசனுக்கு தலா 6.100 கிலோ தங்கம், 400 கிராம் வைரம் என பங்கிட்டுள்ளனர்.
புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்டு காட்சிப்படுத்திய பெங்களூரு போலீஸார்.
அப்போது சுரேஷூக்கு பணத் தேவை இருந்ததால், ஒரு கிலோ தங்கத்தை மகேந்திரன் என்பவர் மூலம் உடனடி யாக விற்பனை செய்துள்ளார். இதற்கான முன்தொகையாக ரூ.7 லட்சம் பெற் றுள்ளார். சுரேஷின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மகேந்திரனிடமிருந்து தங்க நகைகளை மீட்க முயற்சித்து வருகிறோம். கணேசனின் பங்கு நகைகள் மீட்கப்பட்டு விட்டன. முரு கனின் பங்கு நகைகளும் மீட்கப்பட்டு கர்நாடக போலீஸாரிடம் உள்ளது. லலிதா ஜூவல்லரி நிர்வாகம் புகாரில் குறிப்பிட்டிருந்த தங்க நகைகளின் அளவுக்கும், இவர்கள் கூறும் தங்க நகைகளின் அளவுக்கும் இடையே சிறிது வித்தியாசம் இருக்கிறது. அது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கொள்ளைக்கு பயன் படுத்திய கார் குறித்த விவரம் முருக னுக்கு மட்டுமே தெரியுமாம். எனவே, முருகனிடம் விசாரித்தபிறகே காரை பறிமுதல் செய்ய முடியும் என்றனர்.
இதற்கிடையே மதுரை பகுதியில் நடைபெற்ற கொள்ளை, திருட்டு வழக்கு கள் தொடர்பாக மதுரை தனிப்படை போலீஸாரும், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 4 வழக்குகள் தொடர் பாக திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸாரும் சுரேஷிடம் விசாரித்து சில தகவல்களை பெற்றுக் கொண்டுள்ள தாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT