Published : 16 Oct 2019 08:00 AM
Last Updated : 16 Oct 2019 08:00 AM
மேடவாக்கம்
பெரும்பாக்கத்தில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேடவாக்கம் அடுத்த பெரும் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகன் ஸ்டீபன் (28). ஆட்டோ ஓட்டுநர். இதே பகுதியைச் சேர்ந்த இந்திராநகர் ஏரிக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் தேவன். இவரது மகன் ஆனந்த் (29). தனியார் நிறுவன துப்புரவுத் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ஆட்டோவும், பைக்கும் மோதிக் கொண்டது. இருத்தரப்பினரும் சண்டை மூண்டது. இதை அங்கிருந்த ஸ்டீபனும், ஆனந்தும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநருக்கு ஆதரவாக இருவரும் செயல்பட்டதால், பைக் கில் வந்தவர்கள் ஆத்திரமடைந் துள்ளனர்.
இதையடுத்து, பைக்கில் சென்றவர்கள் 6 பேருடன் மீண்டும் அங்கு வந்தனர். அப்போது மது அருந்திக் கொண்டிருந்த ஸ்டீபன், ஆனந்தை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போலீஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பள்ளிக் கரணை போலீஸார், பெரும் பாக்கம் பகுதியைச் சேர்ந்த தீபக், மார்டின், கணேசன், முத்து, அகஸ்டின் மற்றும் காரப்பாக் கத்தைச் சேர்ந்த மணி ஆகி யோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT