Published : 05 Oct 2019 05:02 PM
Last Updated : 05 Oct 2019 05:02 PM
தமிழகத்தில் 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சப் டிவிஷனில் ஏஎஸ்பியாகப் பணியாற்றும் தீபா சத்யன் சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு ஏஎஸ்பி பெத்துவிஜயன் எஸ்பியாகப் பதவி உயர்வு பெற்று சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.(இது ஒரு தகுதி உயர்த்தப்பட்ட பதவி)
இவ்வாறு நிரஞ்சன் மார்டி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT