Published : 05 Oct 2019 11:31 AM
Last Updated : 05 Oct 2019 11:31 AM
கோவில்பட்டி
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத ரூ.3.17 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ், ஆய்வாளர் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளர் பாண்டியன், ஆட்சியர் அலுவலக தணிக்கை குழு அலுவலர் கருப்பசாமி உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.
ஊராட்சி செயலாளர்களிடமிருந்து பிடிஓ அலுவலகத்துக்கு லஞ்சப்பணம் வருவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், அலுவலக ஊழியர்களின் அறைகள் மற்றும் அவர்களது உடமைகள் ஆகியவற்றை சோதனை செய்தனர்.
மேலும், அலுவலகத்தில் இருந்த ஊராட்சி செயலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஆகியோரிடமும், வெளியே இருந்த ஒரு வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.3.17 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை இரவு நீண்ட நேரம் நடந்ததால் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
காலையில் இருந்தே லஞ்ச ஒழிப்பு போலீஸார் கண்காணித்துக் கொண்டிருந்ததாகவும் மாலை 5 மணிக்கு மேலேயேயும் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து அதிகாரிகள் குழுவினரை வரவழைத்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.கோமதிவிநாயகம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT