Published : 04 Oct 2019 08:25 AM
Last Updated : 04 Oct 2019 08:25 AM
சென்னை
சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை பாரதி நகர் 2-வது தெருவில் அட்டிகா கோல்டு நிறுவனம் உள்ளது. இங்கு கிரிஷ் என்பவர் காசாளராக இருக்கிறார். பெங் களூரில் உள்ள நிறுவனத்துக்குச் சென்ற கிரிஷ், ரூ.20 லட்சம் பணத்துடன் கடந்த 2-ம் தேதி சென்னை திரும்பினார். கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து நிறுவன செக்யூரிட்டி சந்திரக் குமார் என்பவருடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் தி.நகர் அலுவலகத்துக்கு வந்தார்.
கிரிஷ், அலுவலகத்துக்குள் நுழைந்ததும், காரில் பின்தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீ ரென அலுவலகத்துக்குள் புகுந்து, கிரிஷ் வைத்திருந்த பையைப் பறிக்க முயன்றனர். ஆனால் பையை கொடுக்காமல் அவர் களுடன் கிரிஷ் போராடினார்.
அப்போது அலுவலகத்துக்குள் பாதுகாப்பில் இருந்த செக்யூரிட்டி சையத் சுல்தான், தான் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி கொள்ளையர்களை சுடப் போவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து ஓடி, காரில் தப்பிச் சென்று விட்டனர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேம ராவில் பதிவாகி உள்ளன.
முகமூடி அணிந்திருந்த கொள் ளையர்கள் கைத் துப்பாக்கி மற்றும் இரும்பு கம்பி வைத்திருந்தாகவும், இந்தி மொழியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாண்டி பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காரில் தப்பிச் சென்ற கொள் ளையர்களைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கொள்ளைக் கும்பல் கோயம் பேட்டில் இருந்தே கிரிஷை பின்தொடர்ந்து சிவப்பு நிறக்காரில் வந்துள்ளனர். அந்தக் காரின் எண்ணை வைத்து நடத்திய விசார ணையில் அது போலியான எண் என்பது தெரியவந்துள்ளது.
காரை அடையாளம் கண்டு பிடித்துள்ள தனிப்படையினர், அந்த காருக்குள் இருந்தவர்களின் உருவங்களையும் கண்காணிப்பு கேமரா மூலம் எடுத்துள்ளனர். அதை வைத்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள் ளையர்கள் துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் வைத்திருப்பதால் அவர்களைப் பிடிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT