Published : 02 Oct 2019 08:04 AM
Last Updated : 02 Oct 2019 08:04 AM

விவசாயி கொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு: வழக்கறிஞர், ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை- பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை

மன்னார்குடி அருகே வேலி தகராறில் விவசாயி தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர், ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி தாலுகா கீழத்திருப்பாலக் குடியை சேர்ந்த விவசாயி தமிழ்செல்வன். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆசைத்தம்பி. இவர்கள் இருவர் வீட்டுக்கும் இடையே வேலி பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக அவர் களுக்கு இடையே சண்டை ஏற் பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளிக் கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த பொய்யாமொழி என்பவர் ஆசைத்தம்பிக்கு ஆதரவாக தமிழ்ச்செல்வன் வீட்டுக்குச் சென்று பேசியுள்ளார். அப்போது, தமிழ்ச்செல்வனுக்கும், பொய்யா மொழிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொய்யாமொழி கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். அதன்பிறகு ஒரு வாரம் கழித்து தமிழ்ச்செல்வன் படு கொலை செய்யப்பட்டார். கடந்த 25-12-2005 அன்று நடைபெற்ற சம்பவத்தின்போது தமிழ்ச்செல்வ னின் வலது கையை கொலையாளி கள் வெட்டி எடுத்துச் சென்று விட்டனர். சம்பவ இடத்தின் அருகே போலீஸார் நடத்திய சோதனையில், அங்கு நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து, அவற்றை அழித் தனர்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக பொய்யாமொழி, அவரது உறவினரும் வழக்கறிஞ ருமான இளங்கோவன், ஆசைத் தம்பி, பொய்யாமொழியின் சகோதரர் செல்வம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. மேலும், கொலை சம்பவத்தை தூண்டியதாக வும், கொலைக் குற்றத்துக்கு உறுதுணையாக இருந்ததாகவும் கூறி பொய்யாமொழியின் தாயார் பத்மாவதி, மனைவி கயல்விழி, மாமனாரான மற்றொரு இளங் கோவன், வாகன ஓட்டுநர் அமுதரசன், வழக்கறிஞர் இளங் கோவனின் மனைவி கனிமொழி ஆகியோர் மீதும் பரவாக்கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சம்பவம் நடைபெற்று சுமார் 10 ஆண்டுகள் வரையிலும் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்காமலேயே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டன. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு களைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கியது. எனினும் முதல் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டிருந்த பொய்யா மொழி, விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவருக்கு முன்பே பொய்யாமொழி யின் சகோதரர் செல்வம், ஆசைத் தம்பி ஆகியோரும் தலைமறை வானார்கள். பொய்யாமொழியின் மாமனாரான இளங்கோவன் உடல் நலக் குறைவால் காலமானார். இதுபோன்ற பல காரணங்களால் சாட்சி விசாரணை தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.

இந்த சூழலில், வெடிகுண்டு பயன்படுத்திய குற்றச்சாட்டும் இருந்ததால், இந்த வழக்கின் விசா ரணை பூந்தமல்லியில் இருக்கும் வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஏற்கெனவே தலைமறைவானவர்கள் தவிர, வழக்கறிஞர் இளங்கோவன் உள்ளிட்ட மற்றவர்கள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி விசா ரணையை எதிர்கொண்டனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி செந்தூர் பாண்டியன் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். வழக் கறிஞர் இளங்கோவன், வாகன ஓட்டுநர் அமுதரசன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்த நீதிபதி, அவர்கள் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக் கப்படுவதாக அறிவித்தார். மேலும், பத்மாவதி, கயல்விழி, கனிமொழி ஆகியோருக்கு எதிரான குற்றச் சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜராகி வாதிட் டார். 2005-ம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்தில், 14 ஆண்டு களுக்குப் பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற் கிடையே வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் தலைமறைவாக உளள பொய்யாமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களை தேடும் பணியை பரவாக்கோட்டை காவல் நிலைய போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளதாகக் கூறப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x