Published : 30 Sep 2019 12:14 PM
Last Updated : 30 Sep 2019 12:14 PM
திருப்புவனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தனியார் தோப்பில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருப்புவனம் கலியாந்தூர் அருகே அரசு மதுபானக் கடை உள்ளது. அதனையொட்டி மேலராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த அழகிச்சி என்பவர் தனது தோட்டத்தில் வீடு கட்டி வருகிறார்.
இந்நிலையில் அவர் நேற்று(ஞாயிறு) காலை அவருடைய வீட்டைப் பார்க்கச் சென்றார். அந்த வீட்டின் மொட்டைமாடியில் 42 வயதுள்ள அடையாளம் தெரியாத ஆண் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதையடுத்து மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது. அந்த நாய் கலியாந்தூர் வரை சென்றது. திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT