Published : 22 Sep 2019 10:13 AM
Last Updated : 22 Sep 2019 10:13 AM

வனத் துறையினரால் தேடப்பட்டு வந்த யானை வேட்டை கும்பல் தலைவன் கைது

மேட்டுப்பாளையம்

வனத்துறையினரால் தேடப்பட்டு வந்த யானை வேட்டை கும்பல் தலைவன், மேட்டுப்பாளையத்தில் கைது செய்யப்பட்டார்.

யானைகள் கூட்டம் ஆண்டு தோறும் வலசை செல்லும் வழித் தடப் பாதையாகவும், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக காடுகளை இணைக்கும் முக்கிய வனப் பகுதி யாகவும் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரக பகுதிகள் அமைந்துள்ளன. இதனால், இந்த வனப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். கடந்த 2011-ல் மேட்டுப்பாளையம் வனத்தில் 3 ஆண் யானைகளும், சிறுமுகை வனப் பகுதியில் ஒரு யானையும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு, அவற்றின் தந்தங்கள் கடத்திச் செல்லப்பட்டன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனத் துறையினர், சம் பந்தப்பட்டவர்களை தேடி வந்தனர்.

சிறுமுகை வனப் பகுதியில் யானையை கொன்ற வழக்கில், வனச்சரகர் மனோகரன் தலைமை யிலான குழுவினர், கடந்த ஜனவரி மாதம் தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்த சிங்கம், குபேந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், மேட்டுப்பாளையம், சிறுமுகை மட்டுமின்றி நீலகிரி மாவட்டம் சீகூர், வல்லக்கடவு மற்றும் தேனி மாவட்டம் வருசநாடு ஆகிய பகுதிகளில் 9 காட்டு யானை களை கொன்று, அவற்றின் தந்தங் களைக் கடத்தியதும், இந்த கும்ப லுக்கு கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம் மத்திப்பாறை பகுதியைச் சேர்ந்த பாபு ஜோஸ் தலைவனாக செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, பாபுஜோஸை தமிழக வனத் துறை தீவிரமாக தேடி வந்தது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் பாபுஜோஸ் ஆஜ ராக வருவதை அறிந்த மேட்டுப் பாளையம் வனத் துறையினர், நீதிமன்றத்தின் வெளியே காத்திருந் தனர். இதை அறியாத பாபுஜோஸ், நீதிமன்றத்தின் வெளியே இருந்த டீக்கடையில் அமர்ந்திருந்தபோது, வனத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, மேட்டுப் பாளையம் வனப் பகுதியில் இக் கும்பலால் கொல்லப்பட்ட யானை களை புதைத்த இடங்களுக்கு பாபு ஜோஸை அழைத்துச் சென்று விசா ரணை நடத்தினர். பின்னர், வன உயி ரினப் பாதுகாப்புச் சட்டம் உட்பட பல்வேறு வனச் சட்டங்களுக்கு கீழ் கைது செய்யப்பட்ட அவரை, மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தர வுப்படி, கோவை மத்திய சிறை யில் பாபுஜோஸ் அடைக்கப்பட்டார். பாபுஜோஸ் கைது செய்யப்பட்டுள் ளது, இயற்கை நல ஆர்வலர்களி டையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x