Published : 22 Sep 2019 08:07 AM
Last Updated : 22 Sep 2019 08:07 AM

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த மாணவர் தேனி கல்லூரியை தேர்வு செய்தது ஏன்?- பின்னணி குறித்து போலீஸார் விசாரணை

ஆண்டிபட்டி

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த மாணவரின் தந்தையும், தேனி மருத்துவக் கல்லூரி அலுவலர் ஒருவரும் நெருங்கிய நண்பர்கள். இதனால் ஆவண சோதனையில் அதிக நெருக்கடி இல்லாமல் இருப்பதற்காக தேனி கல்லூரியை தேர்வு செய்ததாக இங்குள்ள அலுவலர்கள் சிலர் தனிப்படை போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

தேனி மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் உதித்சூர்யா. இவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது உறுதி யானது. இதையடுத்து க.விலக்கு காவல் நிலையத்தில் போலீஸார் கடந்த 18-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் மாணவர் மாய மானதால் அவரைப் பிடித்து விசா ரிக்க ஆய்வாளர் உஷாராணி தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. இக் குழு வினர் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள மாணவரது வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டி இருந்தது. மேலும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனும் குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார்.

இந்நிலையில் தேனி திரும்பிய தனிப் படையினர், இங்குள்ள மருத்துவக் கல்லூரி அலுவலர்கள், பேராசிரியர்களை தனி இடத்தில் வைத்து நேற்று காலை விசாரணை நடத்தினர். இதில் ஆள்மாறாட்டம் குறித்து கடந்த 11, 13-ம் தேதியே தெரிந்தும் உடனடியாக ஏன் புகார் தரவில்லை, குற்றச்சாட்டு உறுதியானதும் உடனடியாக புகார் கொடுத்திருந்தால் மாணவரைப் பிடித்திருக்கலாம். தாமதத்துக்கான காரணம் உள்ளிட்டவை குறித்து விசாரித்தனர்.

அதையடுத்து டீன் ராஜேந்திரனி டம் தனிப் படை ஆய்வாளர் உஷா ராணி, சார்பு ஆய்வாளர் அசோக் ஆகியோர் நேற்று மாலை விசா ரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: புகார் வந்ததும் மாணவர் மற்றும் அவரது தந்தையிடம் கல் லூரி டீன் தலைமையில் கடந்த 13-ம் தேதி விசாரணை நடத்தியுள் ளனர். இதில் ஆள் மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் விடுதியில் இருந்து மாணவர் உதித்சூர்யா சூட்கேசுடன் வெளியேறியதை தடுக்காமல் விட்டுள்ளனர். அவரது தந்தையே அழைத்துச் சென்றுள்ளார். அவர் கள் பிடிபட்டால்தான் முழு தகவல்களும் தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

இக்கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், பின்புலம் உள்ள வர்கள், திட்டமிட்டு செயல்பட்டு ஒதுக்குப்புறமான தேனி கல்லூரி யில் சேருவதற்கும் ஒரு காரணம் உள்ளது. சம்பந்தப்பட்ட மாணவரது தந்தையும், இங்குள்ள உயர் அலுவலர் ஒருவரும் நெருங் கிய நண்பர்கள். இதனால் ஆவண சோதனை, மாணவர் சேர்க்கை யில் பெரிய அளவில் நெருக்கடி, கண்காணிப்பு இல்லாமல் பார்த் துக் கொள்ளலாம் என்பதற்காக இக்கல்லூரியில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து போலீஸாரிடம் கூறி இருக்கிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x