Published : 09 Sep 2019 08:21 AM
Last Updated : 09 Sep 2019 08:21 AM
திருப்பத்தூர்
வேலூர் மாவட்டத்தில் அரக் கோணம், காவேரிப்பாக்கம், பாணா வரம், ஒச்சேரி, நெமிலி, சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை, காட் பாடி, வேலூர், குடியாத்தம், பேர ணாம்பட்டு, ஆம்பூர், வாணியம் பாடி மற்றும் திருப்பத்தூர் உள் ளிட்ட பகுதிகளில் போலி மருத்து வர்கள் அதிக அளவில் இருப்ப தாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந் தரத்துக்கு புகார் வந்தது.
இதையடுத்து, வேலூர் மாவட் டத்தில் பெருகி வரும் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் சண்முகசுந் தரம், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் யாஸ்மினுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தலைமையில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் யாஸ்மின் மேற்பார்வை யில் போலி மருத்துவர்களை கண்டறியும் சோதனை மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
திருப்பத்தூர் அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவ அலுவ லர் செல்வகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மற்றும் காவல் துறையினர் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரியம் பகுதி-2 ல் நேற்று காலை சோதனை நடத் தினர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான குல சேகரன் (35) என்பவர் தனது மளி கைக்கடையின் ஒரு பகுதியில் ஆங்கில முறைப்படி பலருக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது கடைக்கு சென்ற மருத்துவக் குழுவினர் அங்கிருந்த மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து குலசேக ரனை காவல் துறையினர் கைது செய்தனர். அதேபோல், திருப்பத் தூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சுகா தார ஆய்வாளர் சத்யநாராயணன் (65), அச்சுதன் (42), மாது (41)ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் (57) ஆகியோர் மருத்துவம் படிக்கா மல் ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அவர்களை, காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுபோன்று வேலூர் மாவட் டம் முழுவதும் நடத்தப்பட்ட சோத னையில் 20 போலி மருத்துவர்களை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்கு நர் யாஸ்மின் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் 35 குழு அமைக் கப்பட்டு மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. ஒவ் வொரு குழுவிலும், ஒரு தலைமை மருத்துவர், ஒரு துணை காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் ஆய்வாளர், ஒரு மருந்தாளுநர், 2 காவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில், திருப்பத்தூர், ஆம்பூர், பேரணாம்பட்டு, பரதராமி, குடியாத் தம், ராணிப்பேட்டை, வேலூர் உள் ளிட்ட பகுதிகளில் 20 போலி மருத்து வர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. முழு விவரம் இன்று வெளியிடப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT