Published : 01 Aug 2019 09:41 PM
Last Updated : 01 Aug 2019 09:41 PM

தமிழகம் முழுதும் 105 டிஎஸ்பிக்கள் பணி இடமாற்றம்

தமிழகம் முழுதும் நேற்றும் இன்றும் 200-க்கும் மேற்பட்ட டிஎஸ்பிக்கள், ஏசிக்கள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று 105 டிஎஸ்பிக்கள், உதவி கமிஷனர்களை மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுதும் 105 டிஎஸ்பிக்கள், உதவி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உட்பட பல மாவட்டங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட டிஎஸ்பிக்கள் சிலர் விபரம்:

எழும்பூர் உதவி கமிஷனர் பிரபாகரன் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு உதவி கமிஷனர் சுப்ரமணி எழும்பூர் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

மயிலாப்பூர் உதவி கமிஷனர் தமிழ்நாடு சிறப்புக் காவற்படை வீராபுரம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். 
நாமக்கல் சமூக நலன் மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பி நெல்சன் மயிலாப்பூர் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

போளூர் சப் டிவிஷன் டிஎஸ்பி பிரகாஷ்பாபு சென்னை போக்குவரத்து புலனாய்வு பிரிவு (வடக்கு) உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். 

சென்னை போக்குவரத்து புலனாய்வு பிரிவு (வடக்கு) உதவி கமிஷனர் சபாபதி மாநில குற்ற ஆவண காப்பகம் கம்ப்யூட்டர் பிரிவு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி சரவணன் திருவல்லிக்கேணி உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் சங்கரன் திருவொற்றியூர் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

வரதட்சணை தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர் ராஜா, கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

 கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ஜெகதீஷ்வரன் சென்னை மாநகராட்சி விஜிலென்ஸ் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

சேலையூர் உதவி கமிஷனர் சீனிவாசுலு அண்ணாநகர் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

அண்ணாநகர் உதவி கமிஷனர் குணசேகரன் மாடர்ன் கண்ட்ரோல் ரூம் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

 சென்னை போக்குவரத்து புலனாய்வு பிரிவு (மேற்கு) உதவி கமிஷனர் சம்பத் எஸ்.ஆர்.எம்.சி உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

 எஸ்.ஆர்.எம்.சி உதவி கமிஷனர் செம்பேடு பாபு பூந்தமல்லி உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி நுங்கம்பாக்கம் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் கலியன் தி.நகர் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

போலீஸ் பயிற்சி மைய டிஎஸ்பி அகஸ்டின் பால் சுதாகர் வில்லிவாக்கம் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

வில்லிவாக்கம் உதவி கமிஷனர் முத்துமாணிக்கம், சென்னை நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனர் அனந்தராமன் சைதாப்பேட்டை உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

சைதாப்பேட்டை உதவி கமிஷனர் சங்கரலிங்கம் சென்னை நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் அஷோக்நகர் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். 

சென்னை நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனர் கலைச்செல்வன் சென்னை காவல் ஆணையரக மக்கள் தொடர்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை காவல் ஆணையரக மக்கள் தொடர்பு அதிகாரி சுந்தர மூர்த்தி திருச்சி பொன்மலை உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x