Published : 01 Aug 2019 08:48 PM
Last Updated : 01 Aug 2019 08:48 PM

ஹெல்மட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் , மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்: வந்தது புதிய மோட்டார் வாகன மசோதா 

மோட்டார் வாகனச்சட்ட மசோதா ஒப்புதல் பெறப்பட்டு குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் வாகனச்சட்டம் அமலானால் மாற்றப்பட்ட அபராதத்தொகை குறித்த தகவல்கள் இதோ.

விபத்துக்களை குறைக்கவும், போக்குவரத்தை சீரமைக்கவும், விபத்தில் உயிரிழப்போர், காயமடைவோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு போன்றவற்றை அதிகரித்து வழங்கவும், காலத்துக்கு ஏற்றவகையில் மோட்டார் வாகனச்சட்டத்தை திருத்தி மக்களவையில் மோட்டார் வாகன மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று மாநிலங்கவையிலும் இது வெற்றிபெற்றது .தற்போது குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக மசோதா சென்றுள்ளது. அவர் ஒப்புதல் அளித்தவுடன் சட்டம் நடைமுறைக்கு வரும்.  இந்த புதிய சட்டத்தின்படி அனைத்து விதிமீறல்களுக்கும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளானால் கடுமையாக பார்க்கப்படுகிறது.

சில விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும், இனி சட்டமானப்பின் வரப்போகும் அபராதமும் ஒரு பார்வை:

* ஹெல்மெட் இல்லாமல் (without helmet)வாகனம் ஓட்டினால் முன்பு அபராதம் ரூ 100 இனி- ரூ 1000 அபராதம் மற்றும் 3 மாதம் உரிமம் ரத்து.

* குடித்துவிட்டு வாகனம் (drunken drive)ஓட்டினால் முன்பு அபராதம் ரூ.2000 இனி- ரூ.10000

* சாலை விதிகளை பின்பற்றாமல் (traffic violation)வாகனம் ஓட்டினால் முன்பு ரூ. 100 இனி- ரூ.500

* ஓட்டுனர் உரிமம் இல்லாமல் (without licence) வண்டி ஓட்டினால் முன்பு அபராதம் ரூ.500 இனி- ரூ.5000

* ஓட்டுனர் உரிமம் தகுதி இழப்பு (licence suspend) செய்யப்பட்டிருக்கும் பொழுது வண்டி ஓட்டினால் முன்பு  அபராதம் ரூ.500 இனி- ரூ.10,000

* இன்சூரன்ஸ் இல்லாமல் இருந்தால் (without insurance) முன்பு அபராதம் ரூ.1000 இனி- ரூ. 2000

 * ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வண்டி ஓட்டினால் (rash driving)முன்பு அபராதம் ரூ. 1000 இப்பொழுது ரூ. 5000 

* அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வண்டி ஓட்டினால் (over speed) முன்பு அபராதம் ரூ. 500 இப்பொழுது ரூ. 5000

* இரண்டு நபர்களுக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் (triples) சென்றால் முன்பு அபராதம் ரூ.100 இனி-ரூ 2000 அபராதம் மற்றும் 3 மாதம் உரிமம் ரத்து.

இதில் புதிதாக சில சட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது, அவை:

* ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறாக வாகனம் ஓட்டினால் ரூ 10000 அபராதமாக விதிக்கப்படும்.

* 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் அவர்களின் பாதுகாவலர்கள் அல்லது பெற்றோர்கள் அல்லது வாகனத்தின் உரிமையாளர்  மீது ரூ. 25,000 அபராதத்துடன் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். சிறார் மீது அதற்குரிய வழக்கு பாயும்,  வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கோல்டன் அவர் எனப்படும் அந்த நேரத்துக்கு முன்னுரிமை அளித்து எந்த மருத்துவமனையும் சிகிச்சை அளிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. வாகன விபத்தில் உயிரிழப்பவர்களுக்கான இன்ஷுரன்ஸ் தொகையும் அதிகரிக்கப்படும். மேலும் என்னென்ன சட்டங்கள் உள்ளது, மாற்றப்பட்டுள்ளது என்பது நடைமுறைக்கு வரும்போது தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x