Published : 25 Jul 2019 09:04 AM
Last Updated : 25 Jul 2019 09:04 AM
சென்னை
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடும் மாணவர் கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் எச்சரித்துள்ளார்.
சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தி, அரி வாள் போன்ற ஆயுதங்களை வைத்து, சக கல்லூரி மாணவர் களை பேருந்தில் வைத்தும், சாலையில் ஓட ஓட விரட்டியும் வெட்டினர். இதில் வசந்த் என்ற மாணவர் உட்பட 7 மாணவர்கள் காயம் அடைந்தனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. கடுமையான கண்ட னங்கள் எழுந்தன. இதுபோன்ற மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
4 மாணவர்கள் கைது
இதுகுறித்து அரும்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மதன் (20), ஸ்ருதி (20), ரவிவர்மன் (20), ராகேஷ் குமார் (21) ஆகிய 4 மாணவர்களை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி, ஆயுதங்களுடன் தாக்குதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 4 மாணவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய் யப்பட்ட இரு மாணவர்களையும் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழிச்செல்வன் சஸ் பெண்ட் செய்து இருக்கிறார்.
மாணவர்கள் மோதல் சம்ப வத்தை தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி முதல்வர்களுடன் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு நேற்று காவல் துறையினர் கவுன்சலிங் கொடுத்தனர்.
பின்னர் சென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “மாண வர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டால் அந்த மாணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் குறைந்தது 10 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை வரும். கத்தியுடன் சாலையில் திரிந்து அச்சுறுத் தல் ஏற்படுத்தியதுடன் பொது அமைதியை குலைத்துள்ளனர்.
தொடர்ந்து பிரச்சினைகளில் ஈடுபடும் மாணவர்கள் கண்காணிக் கப்பட்டு காவல் நிலைய சரித்திர குற்றப்பதிவேட்டில் பெயர் குறிக் கப்படும். அவர்கள் தொடர் கண் காணிப்பில் வைக்கப்படுவார்கள். சென்னையில் ‘ரூட் தல’ என்ற வார்த்தையே இனிமேல் இருக்கக் கூடாது. அதற்காக தொடர் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரச்சினைக்குரிய பேருந்து வழித் தடத்தில் பாதுகாப்புக்கு போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பேருந்தில் வன்முறையில் ஈடு பட்டால் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு 100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க ஓட்டு நரையும் நடத்துநரையும் அறி வுறுத்தி இருக்கிறோம்” என்றார்.
இதேபோல, சென்னை காவல் துணை ஆணையர் சுகுணாசிங் மாநில கல்லூரி மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடல் நடத்தி னார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் நல்லுறவு ஏற்படும் வகையில் பேசியுள்ளோம். அவர்களுக்கு கவுன்சிலிங்கும் கொடுத்துள்ளோம்” என்றார்.
29இ 53இ ‘ரூட் தல’ பிரச்சினை
இந்நிலையில் நேற்று ஒரு புதிய வீடியோ வெளியானது. அதில், ஒரு மாணவரை அரை நிர் வாணப்படுத்தி உட்கார வைத்திருக் கிறது மற்றொரு மாணவர் கும்பல். தனியாக சிக்கிக் கொண்ட அந்த மாணவரை தாக்கி, ‘53-இ ரூட் தான் கெத்து’ என்று சத்தமாக சொல்லச் சொல்கிறார்கள். மேலும், அதை ஒரு பேப்பரில் நூறு முறை எழுதவும் சொல்லி கட்டாயப்படுத்து கின்றனர்.
இந்த வீடியோ குறித்து போலீ ஸார் நடத்திய விசாரணையில், அதில் அரை நிர்வாணப்படுத்தப் பட்டு இருக்கும் மாணவரும் பச்சை யப்பன் கல்லூரியைச் சேர்ந்தவர் தான் என்பது தெரிய வந்துள்ளது.
பாரிமுனை முதல் மாங்காடு வரை செல்லும் 53-இ பேருந்து, பெரம்பூர் முதல் திருவேற்காடு வரை செல்லும் 29-இ பேருந்து, இந்த இரு பேருந்து வழித்தட ரூட் தலையில் யார் கெத்து என்ற அற்ப விஷயத்துக்காகவே மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக் கொண் டது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
2 மாணவர்கள் சஸ்பெண்ட்: கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை
பேருந்தில் பட்டாக்கத்தி, அரிவாளால் சக மாணவர்களை வெட்டிய வன்முறை சம்பவம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேரை கல்லூரி நிர்வாகம் நேற்று சஸ்பெண்ட் செய்தது.
கல்லூரி கல்வி இயக்குநர் ஜோதி வெங்கடேஸ்வரன் கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் குறித்து கல்லூரி முதல்வர் அருள்மொழிச்செல்வன் மற்றும் மூத்த பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, கல்லூரி முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வன்முறைச் சம்பவம் கல்லூரிக்கு வெளியே நடந்துள்ளது. கல்லூரி வளாகத்துக்குள் எந்த மாணவரும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வருவதில்லை. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அளித்த அறிக்கையின்படி முதல்கட்டமாக 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாலும் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மேற்படிப்பு வாய்ப்பு, அரசு வேலைவாய்ப்புகள் குறித்து உளவியல் ஆலோசனை வழங்கி வருகிறோம்.
எங்கள் கல்லூரியைப் பொருத்தவரையில், பேராசிரியர்கள், மாணவர்களுடன் நண்பர்கள் போலத்தான் பழகுவார்கள். ஏழை மாணவர்களுக்கு மனிதாபிமானத்தோடு கல்விக் கட்டணத்தை செலுத்தும் சமூக அக்கறை கொண்டவர்களாக பேராசிரியர்கள் உள்ளனர்.
ஒருசில மாணவர்களால்தான் கல்லூரிக்கு இதுபோன்ற அவப்பெயர் ஏற்படுகிறது. மாணவர்களை கண்காணிக்க பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வன்முறை மற்றும் மோதலில் ஈடுபட்டால் நிர்வாகம் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT