Published : 24 Mar 2025 06:50 AM
Last Updated : 24 Mar 2025 06:50 AM

சென்னை | பெட்ரோல் பங்க் மேலாளர் என நினைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை: பெட்​ரோல் பங்க் மேலா​ளர் என நினைத்து சென்​னை​யில் உள்ள காவல் கட்டுப்​பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். கடந்த 20-ம் தேதி இரவு 10.30 மணி​யள​வில் சென்னை எழும்​பூர், பாந்தி​யன் சாலை​யில் உள்ள மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு போன் அழைப்பு ஒன்று வந்​தது. எதிர்​முனை​யில் பேசிய நபர், ‘நீங்​கள் இருக்​கிற இடத்​தில் வெடிகுண்டு வைத்​துள்​ளேன்.

அது 5 நிமிடத்​தில் வெடித்து சிதறும்’ எனக்​கூறி இணைப்பை துண்​டித்​தார். இதையடுத்​து, போலீ​ஸார் வெடி குண்டு​ நிபுணர்​களு​டன் சென்று காவல் கட்​டுப்​பாட்டு அறை​யில் சோதனை மேற்​கொண்​டனர். வெடிபொருட்​கள் எது​வும் சிக்​க​வில்​லை. எனவே, மிரட்​டல் வதந்தி என்பது உறுதியானது. மிரட்​டல் வந்த செல்​போன் எண்ணை அடிப்​படை​யாக வைத்து விசாரித்த போலீஸார், திருப்​பூர் மாவட்​டம், உடுமலைப்​பேட்​டையை சேர்ந்த லிங்​கபூபதி (20) என்​பவரை கைது செய்​தனர்.

அவரை சென்னை அழைத்து வந்து விசா​ரித்தனர். கைது செய்​யப்​பட்ட லிங்கபூபதி திருப்​பூர் மாவட்​டத்​தில் உள்ள பெட்​ரோல் பங்க் ஒன்​றில் வேலை செய்து வந்​துள்​ளதும், அங்கு சம்​பளம் சரிவர வழங்​கப்​ப​டாத​தால் வேலை​யி​லிருந்து நின்​றுள்​ளதும், இதனால், பெட்​ரோல் பங்க் மேலா​ளர் பழனி​சாமி லிங்​கபூப​தியை தொடர்பு கொண்டு வேலைக்கு வரு​மாறு மிரட்டி உள்​ளார்.

மேலும், வேலைக்கு வரவில்லை என்​றால் வெடிகுண்டு வீசி விடு​வேன் என்று மிரட்டி சென்​றுள்​ளார். இதனால், ஆத்​திரம் அடைந்த லிங்​கபூபதி மேலா​ளர் பழனி​சாமிக்கு போனில் மிரட்​டல் விடுப்​ப​தாக நினைத்து காவல் கட்​டுப்​பாட்டு அறை எண்​ணுக்கு மிரட்​டல் விடுத்​தது தெரிய​வந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x