Published : 22 Mar 2025 06:20 AM
Last Updated : 22 Mar 2025 06:20 AM

சென்னை | மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை: தனியார் நிறுவன உரிமையாளர் கூட்டாளியுடன் கைது

சென்னை: சென்​னை​யில் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனை​யில் ஈடு​படு​பவர்​களை போலீ​ஸார் அடுத்​தடுத்து கைது செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், மதுர​வாயல் போலீ​ஸார் வானகரம் பகு​தி​யில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்பு அருகே கண்​காணித்​தனர்.

அப்​போது, அங்கு மெத்​தம்​பெட்​டமைன் என்ற போதைப்​பொருளை வைத்​திருந்த புழல் கிஷோர்​கு​மார் (23), அதே பகுதி மணி​கண்​டன் என்ற மணி (36) ஆகிய இரு​வரை கைது செய்​தனர். அவர்​கள் கொடுத்த தகவலின்​படி வானகரத்​தைச் சேர்ந்த பாசில் உல்லா (36) என்​பவர் கைது செய்​யப்​பட்​டார்.

அவர்​களிட​மிருந்து விற்​பனைக்​காக வைக்​கப்​பட்​டிருந்த மெத்​தம்​பெட்​டமைன் வகை போதைப் பொருள் பறி​முதல் செய்​யப்​பட்​டது. விசா​ரணை​யில் கைது செய்​யப்​பட்ட மணி​கண்​டன் என்ற மணி கேட்​டரிங் நிறு​வனம் நடத்தி வரு​வதும், பாசில் உல்லா தனி​யார் நிறு​வனங்​களுக்கு ஆட்​களை தேர்வு செய்து கொடுக்​கும் நிறு​வனம் நடத்தி வரு​வதும் தெரிய​வந்​தது. தலைமறை​வாக உள்ள இவர்களது கூட்​டாளி​களை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x