Published : 19 Mar 2025 03:56 PM
Last Updated : 19 Mar 2025 03:56 PM

நிலத்தகராறில் திமுக நிர்வாகி கழுத்து நெரித்து கொலை: செஞ்சியில் உடல் புதைத்த மூன்று பேர் கைது 

கொலை செய்யப்பட்ட குமார்.

தாம்பரம்: சென்னை அருகே நிலத்தகராறு காரணமாக திமுக நிர்வாகி கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு விழுப்புரம் அருகே செஞ்சியில் உடல் புதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (71) திமுகவின் தொமுச சங்க நிர்வாகியாக உள்ளார். இவரது உறவினர் ஒருவர் மும்பையில் உள்ள நிலையில் அவருக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் நிலம் ஈசிஆர் உத்தண்டியில் உள்ளது. இந்த இடத்தை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி என்பவர் போலி பத்திரங்கள் தயார் செய்து இடத்தைச் சுற்றி காம்பௌண்ட் சுவர் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து மோசடி செய்ய முற்பட்டுள்ளார்.

இந்த தகவல் மும்பையில் உள்ள இடத்தின் உரிமையாளருக்கு தெரிய வர உடனடியாக சென்னையில் உள்ள தனது உறவினரான குமாருக்கு தகவல் தெரிவிக்கிறார். தகவலின் பெயரில் சென்று பார்த்த போது நில மோசடி நடப்பது கண்டு அங்கே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள விஜய், செந்தில்குமார், ஊரப்பாக்கம் ரவி.

அப்போது இரு தரப்பும் தங்களது நிலத்திற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். அதில் குமாரின் உறவினர் உடைய ஆவணங்களே உண்மையானது என தெரியவந்தது. இதனால், ரவி தரப்பு குமார் மேல் கடும் கோபத்தில் இருந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி சென்னையில் உள்ள குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ரவி இடம் தொடர்பாக சந்திக்க வேண்டும் தாம்பரம் வரும்படி கூறியுள்ளார். இதை நம்பிய குமார் ஆட்டோ மூலம் 16ஆம் தேதி மதியம் தாம்பரம் வந்துள்ளார்.

தாம்பரம் வந்த பின்பு அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் ஆனதுடன் அவர் எங்கு சென்றார் என தெரியாத நிலையில் பல இடங்களில் தேடிய அவரது உறவினர்கள் இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் அவருடைய மருமகன் மோகன் என்பவர் புகார் அளித்தார்.

இதுகுறித்து தாம்பரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர் கடைசியாக பேசிய ரவி அவரது செல்போன் எண்ணைக் கொண்டு அவரை காவல் நிலையம் அழைத்து தீவிரமாக விசாரித்து நிலையில் அவரை கழுத்தை நெறித்து கொலை செய்து செஞ்சி அருகே புதைத்தது தெரியவந்தது

இது குறித்து காவல் துறை தரப்பில், “16-ம் தேதி ஆட்டோ மூலம் தாம்பரம் வந்த குமார் அங்கு காருடன் காத்திருந்த ரவி மற்றும் இருவர் குமாரை நிலம் பார்ப்பதற்கு என சொல்லி திருப்போரூர் வரை செல்ல வேண்டும் எனக் கூறி காரில் அழைத்துக் கொண்டு சென்று உள்ளனர். காரில் ஊரப்பாக்கம் பகுதியை தாண்டியவுடன் ஈசிஆர் இடம் தொடர்பாக நீ ஏன் தலையிடுகிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆத்திரத்தில் கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்பு பிணத்தை கொண்டு போய் செஞ்சி வனப்பகுதி அருகே ஆற்று படுகையில் புதைத்து விட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து குற்றவாளி ரவியை கைது செய்த போலீஸார் அவரது கூட்டாளிகளான போரூர் அருகேயுள்ள ஐயப்பந்தாங்கலைச் சேர்ந்தவர்கள் விஜய் (38), செந்தில் குமார் (38) கைது செய்தனர். மேலும், குற்றவாளியை செஞ்சி அழைத்து சென்று புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டி பிணத்தை அதிகாரி முன்னிலையில் தோண்டி எடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x