Published : 25 Feb 2025 07:53 AM
Last Updated : 25 Feb 2025 07:53 AM

கரூர் அருகே மாணவிக்கு கத்திக்குத்து: பிளஸ் 2 மாணவர் கைது - பின்னணி என்ன?

கரூர்: கரூர் மாவட்டம் தரகம்​பட்டி அருகே​யுள்ள அண்ணாவி பூசாரி பட்​டியைச் சேர்ந்த 17 வயது சிறு​வன், தரகம்​பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி​யில் பிளஸ் 2 படித்து வருகிறார் இவருக்கும், தரகம்​பட்டி மாடல் பள்ளி​யில் 10-ம் வகுப்புபடிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்​டுள்ளது. இந்நிலையில், அந்த மாணவர் குறித்து மாணவி இழிவாகப் பேசி​யதாக கூறப்​படுகிறது. இதையடுத்து, நேற்று முன்​தினம் இரவு அந்த மாணவி​யின் வீட்டுக்​குச் சென்ற மாணவர், அவரை வீட்டுக்கு வெளியே வரவழைத்து கத்தி​யால் கழுத்​தில் குத்தி​யதுடன், அவர் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கி​லியையும் பறித்துக்​ கொண்டு ஓடிவிட்டார்.

இதுகுறித்த புகாரின்​பேரில் பாலவிடுதி போலீ​ஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பிளஸ்2 மாணவரை கைது செய்தனர். இதனிடையே, அந்த மாணவி கூட்டு பாலியல்வன்கொடுமை செய்​யப்​பட்டு, கழுத்து அறுக்கப்​ பட்​டதாக சில தொலைக்​காட்​சிகளில் செய்திஒளிபரப்பானது. இதுகுறித்து கரூர் மாவட்டஎஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா கூறும்​ போது, “மாணவி கூட்டு பாலியல் வன்​கொடுமைசெய்​யப்​பட​வில்லை. தவறான தகவல்களை வெளி​யிட​வேண்​டாம்” என தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x